மதுரை, யா.ஒத்தக்கடையில் பொது நடைபாதையை ஆக்கிரமித்த தனியார் பள்ளி - அகற்றிய அதிகாரிகள்


 மதுரை, யா.ஒத்தக்கடையில் உள்ள திருமோகூர் ரோடு ஹாஜிஸ் கார்டன் குடியிருப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது அங்கு ஒரு தனியார் பள்ளியும் செயல்படுகிறது. 

இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள பொது நடைப்பாதையை பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். நடப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுகிலா என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் 8.6.2018 அன்று பள்ளி நிர்வாகத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. 

இதனை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சட்டத்துக்கு விரோதமாக பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது என தெரிய வந்ததன் அடிப்படையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றவும் உண்மைக்கு புறம்பாக வழக்கு தொடர்ந்தனால் அபாரத்தத் தொகையும் விதித்து உத்திரவிட்டது. 

இதனைதொடர்ந்து யா.ஒத்தக்கடை ஊராட்சி சார்பில் பலமுறை பள்ளி நிர்வாகத்திற்கு நடைப்பாதையை அடைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளீர்கள். இது சட்டத்திற்கு விரோதமான செயல் ஆகவே ஆக்கிரமிப்பு முழுவதையும் அகற்ற பலமுறை கூறியும் எச்சரிக்கை விடுத்தும் பள்ளி நிர்வாகம் செவி சாய்க்காமல் இருந்துள்ளது. ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் புகழேந்தி அங்கு சென்று ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்த சொல்லி வந்தவுடன் மீண்டும் கதவுகளை அமைத்துக் கொள்வது பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்வது என தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது காவல்துறை யினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த நிலையில், 

நீதிமன்றம் உத்திரவின் அடிப்படையில் இன்று மதுரை கிழக்கு வட்டாட்சியர் சிவகாமிநாதன், ஒத்தக்கடை வருவாய் ஆய்வாளர் பால்பாண்டி, இராஜகம்பீரம் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், ஒத்தக்கடை மதுரை கிழக்கு வட்ட சார் ஆய்வாளர் இராஜேந்திரன், சர்வேயர் கோபி, மதுரை கிழக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி, ஒத்தக்கடை ஊராட்சி செயலர் சாதிக்பாஷா, ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் புகழேந்தி, ஐந்து துணை சார்பு ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் ஆகியோர் நீதிமன்ற உத்திரவின் படி ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் பள்ளி நிர்வாகத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நீதிமன்ற உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்துள்ளோம். ஆகையால் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நடைபாதையில் இருந்த பள்ளிக்கு சொந்தமான இரும்பு கதவு உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி வாகனத்தை வரவழைத்து ஏற்றி அப் புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்