மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்:முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

ஆர்.ஜெ. தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜிகேஷனல் ட்ரஸ்ட் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்து வமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மதுரை ப்ரீத்தி மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய மாபெரும்  இலவச பொது மருத்துவ முகாம் மதுரை விளாங்குடியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்திராஜூ, சௌமியா விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கணேஷ் பிரபு, ரம்யா கணேஷ் பிரபு, விஷ்ணுசாகர், வருண்சாகர், விபின் சாகர் ஆகியோர் உடன் இருந்தனர். 

கண்புரை உள்ள நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்க ளுக்கு லென்ஸ், மருந்து, தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுரை ப்ரீத்தி மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் இருதய அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் பல்வேறு சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

ராதா பல் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சார்பாக பங்கேற்ற நோயாளிகளுக்கு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் இலவச ஆலோச னைகள் வழங்கி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

இம்முகாமில் பங்கேற்ற அனை வருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மதுரை மேற்கு 6ம் பகுதி கழக செயலாளர் கே.ஆர்.சித்தன் 20-வார்டு வட்டக் கழக செயலாளர் மார்க்கெட் எம்.மார்நாடு ஆகியோர் இவ்விழா விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். முன்னாள் துணைமேயர் கு.திரவியம், 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன்,  மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்திந்திய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், பகுதி துணைச் செயலாளர் முத்துமுருகன் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 






கருத்துரையிடுக

0 கருத்துகள்