மதுரை யானைமலை தமிழ்சங்கம்: "யானைமலை தை திருவிழா-2023"

 


        மதுரை யானைமலை தமிழ்சங்கம் சார்பாக வருகின்ற தை பொங்கல் ஜனவாி 15-ம்தேதி அன்று, யானைமலை தை திருவிழா-2023 ஆண்டுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து "இலச்சினை வெளியீட்டு விழா" யானைமலை ஒத்தக்கடை நீலமேகம் வளாகத்தில் நடைபெற்றது. 

   இந்நிகழ்வில் தமிழர் வீரவிளையாட்டு பேரவை எஸ்.நீலமேகம் வெளியிட்ட யானைமலை தமிழ்சங்கம் இலச்சினையினை, ஒருங்கிணைப்பாளர் இளங்குமரன் பெற்றுக் கொண்டார். மேலும் காளிமுத்து, பரமசிவம், தினகரன், காா்த்திகேயன், மு.ரா.பாரதி, ரெட் கிராஸ் கோபால கிருஷ்னன், நாகேந்திரன், விவேகானந்தன், கலை புகைப்பட கலைஞர் மணி, மற்றும் கருப்பு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்