மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்களுக்கு குறைதீர்க்கும் கோயிலாக காணப்படுகிறது. மக்களின் பல்வேறு பிரச்சனை களுக்கும் அடிப்படை தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தான் தேடி வருகின்றனர். கண்டிப்பாக எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் வருகின்றனர்.
மறுபுறம் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் வந்து செல்லும் ஒரு முக்கிய இடமாக உள்ளது. இதேபோல் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் அங்கே செயல்படுகிறது. எண்ணற்ற அரசு ஊழியர்களும் அங்கு பணி புரிகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியை சுத்தமாகவும் சரியாகவும் வைத்துள்ளனர். ஆனால் பின்புறம் ஆங்காங்கே குப்பைகளும், புதர்களும், பழைய வாகனங்கள் என காட்சியளிக்கிறது. பல இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புறம் பின்புறம் என பல இடங்களில் மது பாட்டில்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக் குள்ளையே எண்ணற்ற மது பாட்டில்கள் காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
மது அருந்திவிட்டு உள்ளேயே பாட்டில்களை வீசி செல்லும் அந்த மர்ம நபர்கள் யார்? எப்போது இந்த செயல்களை செய்கிறார்கள் என கேள்விக்குறியாக உள்ளது. இந் நிலையில் மாலை 7.00 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சில அரசு அலுவலக ஊழியர்களே மது அருந்தி பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதாக புகார் எழுந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதை போல சட்டத்தை மதிக்காமல் இதுபோல் அரசு ஊழியர்களே செய்வது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தவெளி பாராக செயல்படுகிறதா? இதுபோல் செயல் செய்யும் சமூக விரோதிகளை களை எடுக்க வேண்டும். இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எண்ணற்ற மக்கள் வந்து செல்லும் இடத்தில் இதுபோல் மதுபாட்டில் பல இடங்களில் இருப்பதை பார்க்கும் அவர்கள் குடியிருப்பு பகுதிகளில், பள்ளிகளுக்கு செல்லும் இடங்களிலும் இதுபோல் திறந்த வெளியில் மது குடிப்பவர்களை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளேயே எண்ணற்ற மது பாட்டில்கள் கிடப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இவ்வளவு காவல் துறையினர் இங்கு இருக்கும் போது எப்படி இவர்கள் உள்ளே கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளையே சில சமூக விரோதிகள் செய்யும் இதுபோல் காரியங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோல் செயல்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. ஆங்காங்கே கிடக்கும் பாட்டில்களை பார்க்கும் போது இது பல நாட்களாக இல்லை. ஒரு வேலை வருடங்களாக நடக்கிறதோ? என்று சந்தேகம் எழும்புகிறது.
ஆடிய கால்களும், பேசும் வாயும் சும்மா இருக்காது என்பதுபோல் இதை தடுக்கவில்லை என்றால்... தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் இது நடந்து கொண்டே தான் இருக்கும். மாவட்ட ஆட்சியர் இதை கருத்தில் கொண்டு யார்? இதை செய்கிறார்கள் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் ஆங்காங்கே பல இடங்களில் காணப்படும் மது பாட்டல்களை அப்புறப்படுத்த வேண்டும் எண்ணற்ற மக்களின் கோயிலாக கருதப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.....?
0 கருத்துகள்