உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவரும் உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழக்கறிஞருமான டாக்டர். டி.கே.சத்தியசீலன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது.  உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். டி.கே.சத்தியசீலன் பேசியதாவது: அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும். 

இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை நீதியரசர்கள் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது புதிதாக பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் அவசர தேவைக்காக சாலையில் ஒருவர் லிஃப்ட் கேட்டு ஏறும் பட்சத்தில் அவர் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி அபராத தொகையான 2000 ரூபாயை காவல்துறையினர் நம்மிடம் வசூலித்தால் உதவிக்காக அவரை அழைத்து வந்ததற்கு கட்ட வேண்டிய சூழ்நிலை வரும், இதை எப்படி ஏற்றுக்கொள்வது. அதனால் தமிழக அரசு இதை மறுசீராய்வு செய்ய வேண்டும்.

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் ஒளிவுமறைவின்றி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும், போதைப்பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறது, இதை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருளால் அதிக குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ள நிலையில் கொலை கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. ஆகவே இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழித்து உடனடியாக சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும்,  வழக்கறிஞர்களின் சேமநல நீதியில் 50% நலிவடைந்த வயதான வழக்கறிஞர்களுக்கு உயிருடன் இருக்கும்போது நிதியை வழங்கிட வேண்டும், உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.  

இதில்  மாநில துணைத்தலைவர் பாண்டியராஜன், செயலாளர்கள் மனோகரன், கண்ணன், பொருளாளர் கிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் ஆஸ்டின், ஷேக் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்