மதுரை மத்திய சிறையில் சுமார் 2000 சிறைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்காக அவ்வபோது பல்வேறு வகையான மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மத்திய சிறை மற்றும் கிருபா ட்ரஸ்ட் சிஎஸ்ஐ பல் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை இணைந்து நடத்திய பல் சிகிச்சை மருத்துவ முகாம் மதுரை சரக சிறை துறை டி.ஐ.ஜி.பழனி தலைமையில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ் குமார் முன்னி லையில் நடைபெற்றது. இதில், சிஎஸ்ஐ பல் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் சிறைவாசிகள் மற்றும் சிறை பணியாளர் களுக்கு பல் சிகிச்சை அளித்தனர்.
0 கருத்துகள்