பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டிபிகே கோ., லிமிடெட். சமீபத்தில் மூலதனம் மற்றும் வணிக கூட்டணி ஒப்பந் தத்தில் கையெழுத் திட்டன. இதன் மூலம், டி.எஸ்.எஃப்.குழுமத்தின் ஒரு நிறுவனமான பிரேக்ஸ் இந்தியா, டிபிகே நிறுவ னத்தில் முதன்மை மூலதன முதலீட்டின் மூலம் 10 சதவீத பங்குகளைப் பெறுகிறது. இந்த முதலீடு இருநிறுவனங்களுக்கும் முக்கி யமான முன்னேற்றமாகும். இது வர்த்தக வாகன பிரேக்கிங்துறையில் இரு நிறுவனங் களின் பலங்களை பயன் படுத்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர் களுக்கு மேம்பட்ட மதிப்பை உருவாக்க வழி வகுக்கிறது.
எம்&எச்.சி.வி. பிரிவில் முன்னணி உலகளாவிய ஆட்டோ உதிரி பாக உற்பத்தி யாளராக உள்ள டிபிகே பிரேக்குகள், பம்புகள் மற்றும் என்ஜின் சார்ந்த உற்பத் தியில் நிபுணத்துவம் பெற்றது. இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களும் ஒருவரின் பலத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இது ஒத்துப் போகும் புவியியல் சந்தைகளுக்கு அணு கலை வழங்குவதுடன், புதிய வாடிக்கை யாளர்களை இணைத்துக் கொள்ளவும், புதியவிநியோகச் சங்கிலி களை ஆராயவும் உதவுகிறது.
இந்த கூட்டாண்மை, பிரேக்ஸ் இந்தியாவின் தற்போதைய ஹைட்ராலிக் மற்றும் நியூ மேட்டிக் தயாரிப்புகளை புதிய ஏற்றுமதி சந்தைகளில் அறிமுகப்படுத்துகிறது. மேலும், டிபிகே நிறுவனத்தின் கூடுதல் தயாரிப்பு வரிசையை இந்திய உள்நாட்டு சந்தைக்கு விரிவாக்கும் வாய்ப்பையும் திறக்கிறது.
டிபிகே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கௌரு ஒகடா கூறுகையில், “இந்த கூட்டாண்மையின் மூலம், இரு நிறுவனங்களும் தங்களுடைய தொழில்நுட்ப வலிமைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதாரங்களை முழுமை யாக ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து தங்களது சந்தைகளுக்கான உயர்தர மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தீர்வு களை இணைந்து உருவாக்குவோம். அடுத்த தலைமுறை மொபிலிட்டி முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், புதிய வாய்ப் புகளை உருவாக்கவும் இணைந்து முயல்வோம்,” என கூறினார்.
பிரேக்ஸ் இந்தியா மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் விஜய் கூறுகையில், “இந்த முக்கிய முன்னேற்றம் டிபிகே-வுடன் நீண்ட கால உறவின் தொடக்கமாகும். இது மூலதன மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்து கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய சந்தைக்கான டிபிகே தயாரிப்பு வரிசைக்கு பிரேக்ஸ் இந்தியாவிற்கு அணுகல் கிடைக்கிறது; அதே சமயம், இந்தியாவுக்கு வெளியே உள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு பிரேக்ஸ் இந்தியாவின் முன்னணி நியூமேட்டிக் பிரேக்கிங் தயாரிப்புகளை வழங்கும் வாய்ப்பும் உருவாகிறது,” என கூறினார்.
இந்த கூட்டணி தூய்மையான, பாதுகாப் பான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட வர்த்தக வாகன பிரேக்கிங் தொழில் நுட்பங்களை உருவாக்குவதில் முன்னெ டுப்பு செய்கிறது மற்றும் முன்னேற்ற மடைந்த, நிலைத்தன்மை வாய்ந்த மொபி லிட்டி துறைக்கான மாற்றத்தைக் கூடுதல் வேகத்துடன் ஆதரிக்கிறது.


0 கருத்துகள்