மதுரை கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி..


 ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்..,” மதுரை கோட்டத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில்  8 பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் மரணம் அடைந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஆண்டு ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்து ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து 41 பேர் மரணம் அடைந்தனர். 43 பேர் காயமடைந்தனர். ரயில் நிலையங்களில், 'படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்' என விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொது அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. 

 இருந்த போதிலும் பயணிகள் படிக் கட்டுகளில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் நடைபெறுகிறது. படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள் தூக்க கலக்கத்தில் கீழே விழுவது அதிகரித்து வருகிறது. படிக்கட்டு பயணத்தால் அதிகபட்சமாக விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி இடையே 66 பேரும், மதுரை - திண்டுக்கல் இடையே 44 பேரும், விருதுநகர் - செங்கோட்டை இடையே 43 பேரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலும் பாதிப் படைந்த வர்கள் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். பாதிப்படைந் தவர்களில் 87 சதவீதம் ஆண்களும் 13 சதவீதம் பெண்களும் உள்ளனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்