உசிலம்பட்டியில் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம்

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோயில் அருகே திராவிடர் கழகம் சார்பாக மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

உசிலம்பட்டி நகர திராவிடர் கழகம் தலைவர் பவுன் ராசா தலைமை வகித்தார்.  பகுத்தறிவாளர் கழக மாவட்டதலைவர் மன்னர்மன்னன் வரவேற்றார். புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை, மதுரை மண்டல தலைவர் சிவகுருநாதன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ரோ.கணேசன், சிங்கராசா, முத்துக் கருப்பன், பாலா, பு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தி.க.முன்னாள் மண்டல தலைவர் மா.பவுன்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தா. பாண்டியன் ஆகியோர் படங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் ம.தி.மு.க நகரச் செயலாளர் ஜெ.டி.குமார் ஏ.ஐ.டி.யூ.சி மண்டலத் துணைத் தலைவர் ஜீவா, வல்லரசு பார்வர்ட் பிளாக் பி.என்.அம்மாவாசை, கவிஞர். வேல்முருகன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்