பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பத்திரிக்கையாளர்கள் கூட்டம்

மதுரையில் மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் பா.ஜ.க., அரசின் 8 ஆண்டு சாதனைகள் குறித்த விளக்க பத்திரிக்கை யாளர்கள் கூட்டம் நடந்தது. 

பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகள் குறித்து கூறினார். மாநில பொது செயலாளர் நாகராஜன், பொருளாளர் சங்கர், மாவட்டத் தலைவர் பாரதி, மாநகர் ஊடகப் பிரிவு செயலாளர் சங்கர்லால், பொதுக்கழு உறுப்பினர் சுந்தர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் பட்டியல் அணி சார்பில் நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நாடு கடனாளியாக இருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு அந்த கடனை அடைத்து, ஏனைய நாடுகளுக்கு நாம் கடனுதவி வழங்கி வருகிறது. தற்சார்பு மிக்க நாடாக இந்தியா மாறி உள்ளது. தூய்மை இந்தியா, விவசாயிகள் காப்பீடு, ஏழைகளுக்கு வங்கி கணக்கு, முத்ரா திட்டம், தொழிலாளர் நல வாரியம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், இலவச கழிப்பறை, பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்குதல், பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், இஸ்லாமிய பெண்கள் திருமண நிதி உதவி, சிறுபான்மை மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சித் திட்டம் என பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் 320வது சட்ட திருத்தம் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இட ஒதுக்கீடு மூலம் அம்மாநிலத்தில் 16 ரிசர்வேஷன் தொகுதியாக ஒதுக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக பட்டியல் சமுதாய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன பாமர மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வருகிறார். தலித் இயக்கங்கள் அந்த மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர் என கடுமையாக சாடினார். மத்திய அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் துண்டு பிரசுரங்கள், தெருமுனை கூட்டம், விழிப்புணர்வு பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்