மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைமை அலுவலகத்தில் மாநில செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு.ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் ரா.சௌந்தரபாண்டியன், தேனி மாவட்ட தலைவர் போடி குருநாதன் க.விலக்கு முருகன், ஆண்டிபட்டி ஓச்சப்பன், செல்லம்பட்டி தெய்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு துறையினர் மூலம் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகள் ஆகியவற்றை தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறை பெயரை மாற்ற முயற்சி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.கள்ளர் சீரமைப்பு துறையை சீர்மரபினர் நல இயக்கத்தின் நேரடி மேற்பார்வைக்கு கொண்டு வருவதையும், மேலும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மாற்றம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்தும் ஜீலை1-ந் தேதி பந்த் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்