ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி தொடங்க வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


 ஆட்டிசம் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி தொடங்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

  அம்மனுவில், நமது நாட்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிச பாதிப்பிற்கு உள்ளாகி மூளை நரம்பு பாதிக்கப் படுவதால் பேச்சு, புரிதல், சமூக திறன் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு பேச்சு பயிற்சி. ஆக்குபேஷனல் தெரப்பி. சிறப்பு கல்வியியல் பயிற்சி போன்றவற்றின் மூலமாகவே திறனை மேம்படுத்த முடியும் இந்த பயிற்சி ஆயுள் முழுவதும் இக்குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. இப்பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

 மேலும் இக்குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் தெரபி சென்டர்களும் பள்ளிகளும் அதிக கட்டணம் வசூலித்தால் அனைத்து பெற்றோர்களும் இந்தப் பயிற்சிகளை ஆன்டிச குழந்தைகளுக்கு தொடர்ந்து அளிக்க முடியவில்லை. கிராமப்புறத்தில் உள்ள இக்குழந்தைகள் பயிற்சியை இல்லாது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

 குழந்தைகளின் திறனை மேம்படுத்த பிற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளைப் போல் இக்குழந்தை களுக்கும் ஒரு ஆன்டிச சிறப்பு பள்ளியை மதுரை மாவட்டத்தில் அரசு அமைத்து தர முன்வரவேண்டும். பெற்றோர் களின் நீண்ட நாள் மன சுமைகளையும், பொருளாதார இன்னல்களையும், மன அழுத்தத்தையும் போக்கும் விதமாக அரசு உடனடியாக இந்த சிறப்பு பள்ளியை அமைத்துக் கொடுத்து உதவ வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்