புதுவிளாங்குடி ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை

  மதுரை, புதுவிளாங்குடி ஸ்ரீ காளீஸ்வரி அம்மன்  திருக்கோயிலின் 50-வது ஆண்டு உற்சவ விழா வைகாசி மாதம் 27 ஆம் தேதி 10.06.2022 முதல் நடை பெற்று வருகிறது.  இன்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் கலைவாணி கலைக்குழு சிங்கப்பூர் புகழ் எஸ்.மீனாம்பிகை தலைமையில் திரு விளக்குபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மன் சன்னதி எதிரே குத்துவிளக்கு ஏற்றிவழிபாடு செய்தனர்.  கோயில் விழா குழுவினர் இந்த திருவிளக்கு பூஜையை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அப்பகுதிவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








கருத்துரையிடுக

0 கருத்துகள்