மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை நிதி அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை 24.06.2022  இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன் திறந்து வைத்தார்.

 மதுரை அரசு இராசாசி மருத்து வமனை வளாகத்தில் அம்மன் சேவைப்பிரிவு உணவகத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு மருத்துவனை டீன் ரத்தினவேல், உணவக உரிமை யாளரும் திரைப்பட நடிகருமான சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த நிதி மைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன் இது சாதாரணமான உணவகமாக தெரியலாம் ஆனால் இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு குறைவான விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் வெளிப்படையான டெண்டர் அளித்து இந்த உணவகம் துவங்கப்பட்டு உள்ளது என்றார்.






 

கருத்துரையிடுக

0 கருத்துகள்