மதுரை கோ.புதூர் அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோயில் 41ஆம் ஆண்டு உற்சவ விழா

 

மதுரை மாவட்டம், கோ.புதூர், காந்திபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோயில் 41ஆம் ஆண்டு உற்சவ விழா சிறப்பாக நடைப்பெற்றது. அதன்பின் அன்னதானம் நடைபெற்றது. தொழிலதிபர் சி.ஆர்.சின்னதுரை அன்னதானத்தை தலைமை தாங்கினார்.  எஸ்.வாசுகி சசிகுமார், கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.சரவண புவனேஸ்வரி, வடக்கு மண்டல தலைவரும் 12 வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி கோ.தளபதி எம்எல்ஏ, அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். விழாவினை ஏற்பாடு செய்த அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோயில் தலைவர் பி.எம்.மருது மற்றும் விழா கமிட்டியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்