மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பேரணி

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும், கண்பார்வை மங்குதல், கைகால் வலிப்பு ஏற்படுதல் இது போன்ற பல தீமைகளிலிருந்து விடுபட மதுபானம் மற்றும் கள்ளச் சாராயத்தை ஒழிப்போம் என சூளுரைக்கப்பட்டது. 

கங்கை கருங் குயில்கள் கலை குழு சார்பாக மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து பாடல்கள் பாடி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் திருமங்கலம் உசிலம்பட்டி கோட்டம் கோட்டாளர் வட்டாட்சியர் அலுவலகம் சிவராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தனசேகரன், கிராம நிர்வாக ஆய்வாளர் பாலமுருகன், திருப்பதி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இவர்களுடன் கங்கை கருங்குயில்கள் கலைக் குழுவினர்களான பாரதி சண்முகம், கலைச்சுடர் மணி செல்வகுமார், அழகேஸ்வரி, கலைச்சுடர் மணி சேகர்,  தவில் கலைஞர் கார்த்திக், கார்த்திகா, தொண்டி ராஜா ஆகியோர் கலை நிகழ்ச்சி மூலம் விழிப் புணர்வை ஏற்படுத்தினர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்