ஆன்லைன் விற்பனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா


மதுரை மாவட்டம் ஃப்யூச்சர் விஷன் நிகழ்ச்சி சார்பாக சிறந்த ஆன்லைன் விற்பனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விற்பனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணி அருகில் கோஹா ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. ப்யூச்சர் விஷன் குழுவின் தலைவரும் சுந்தர் ஆர்ட்ஸ் நிறுவனருமான சுந்தர் அனைவரையும் வரேவற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவி புகழ் செந்துரபூவே நாயகி ஸ்ரீநிதி,  தமிழ் இ-காமர்ஸ் யூடியூப் சேனல் ஜெபஸ்தின், பிரைட்மூன் டெக்னாலஜிஸ் சிஇஒ டேவிட், குருக்ஷேத்ரா அகாடமி கெளசல்யா,  என்-சேரீஸ் பிராண்ட்  அஸ்வினி ஆகியோா் கலந்து கொண்டனர். தொகுப்பாளர் சுதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூகவலைதளங்களில் தொழில் செய்வோர்க்கு சிறப்பு விருந்தினர்களால் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

விழாவில் பல்வேறு துறை சார்ந்த இளைஞர்கள்,  பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தங்களுடைய தொழில்கள் பற்றி அனைவரும் ஒருவார்க்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். முதல் தளத்தில் ஸ்டால்கள் அமைத்து பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனையை மேம்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர். ப்யூச்சர் விஷன் நிகழ்ச்சி குழு சுந்தர், அபி, மேனகா, சத்யா, சுதா ஆகியோரை வந்திருந்த அனைவரும் பாராட்டினார். முடிவில் மேனகா நன்றி கூறினாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்