வணிகர் நலச்சங்கத்தின் 39வது ஆண்டு விழா மற்றும் மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் நலச்சங்கப் பேரவை சார்பில் மதுரை யா.ஒத்தக்கடையில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நரசிங்கம் சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது.
வணிகர் நலச்சங்கப் பேரவைத் தலைவர் கே.எஸ்.ரகுபதி, பொருளாளர் கே.முனீஸ்வரன் தலைமை வகித்தனர். பொதுச்செயலர் தென்னைமரம் எம்.ஏ.இஸ்மாயில் முன்னிலை வகித்தார். ஒத்தக்கடை கிராமத் தலைவர் ஏ.பி.ரகுபதி, ஊராட்சித் தலைவர்கள், முருகேஸ்வரி சரவணன் (ஒத்தக்கடை), ஏ.பி.ஆர்.அண்ணாமலை (திருமோகூர்), அங்காள ஈஸ்வரி டவர் இலங்கிபட்டி கே.கண்ணன், மீனாட்சிபவன் ஆர்.துரைராஜ் துவக்கி வைத்தார்கள்.
மதுரை சரவணா மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் ஒத்தக்கடை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வணிகர் நலச் சங்கப் பேரவை நிர்வாகிகள் ஏ.எஸ்.மூர்த்தி, மு.இரா.பாரதி, யோகராஜ், மனோகரன், அஜிஸ்பாபு, முத்துப் பாண்டி, நாகேந்திரன், செந்தில், தினகரன், பாலு, உமர்பாருக், மோகன்ராஜ், மாயகிருஷ்ணன், புரோஸ்கான், இம்ரான், வீனஸ் சுரேஷ், எட்ராஜ், ஞானபாண்டி, இராஜ் சிலம்பம் குழுவினர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்