மதுரை வடக்கு, மத்தி, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா்கள் உத்தரவின்பேரில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூா், வாடிப்பட்டி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில், தனியாா் மற்றும் அரசுப்பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் செல்வம் (வடக்கு), சித்ரா (மத்தி), சிங்காரவேலு (தெற்கு), மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜாஸ்மின் மொசி கமலா ஆகியோா் கொண்ட குழுவினா், பேருந்து நிலையங்களில நின்று கொண்டிருந்த பேருந்துகளில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் 97 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவைகள் அகற்றப்பட்டன. மேலும், இதுபோல, அதிக ஒலிஎழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தக்கூடாது என வட்டாரப்போக்குவரத்துத்துறை சாா்பில் பேருந்து ஊழியா்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


0 கருத்துகள்