மதுரை மாவட்டம், திருமங்கலம், கரிசல்பட்டி, மேலக்கோட்டையில் அகத்தியர் அன்னதான அறக்கட்டளையில் மேதின விழா கொண்டாடப்பட்டது. அறகட்டளையின் நிறுவனர் பா.முத்துப்பாண்டி தலைமையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் த.அனிதா கொரானா விழிப்புணர்வு முகக்கவசம் வழங்கினார். திருமங்கலம் சித்தர்கள் களப்பணி நண்பர்கள் த.சோம்நாத் சித்தர்கள் படங்களை திறந்து வைத்தார். முனைவர்.செந்திலிங்கம், மதுரை சென்னை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினர்களாகவும், திருமங்கலம் அன்னை வசந்தா அறக்கட்டளை ரகுபதி, சாக்யா அறக்கட்டளை ந.சுகுமார் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர். செயலாளர் மு.சகுந்தலாதேவி ஆடை (சேலை) வழங்கினார். பொருளாளர் பா.செல்லப்பாண்டி மரக்கன்றுகளை வழங்கினார். மேலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், வி.ஆர்.கோபிநாத் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ச.மாலா வரவேற்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் அகத்தியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலக்கோட்டை ஜெயபாண்டி நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
0 கருத்துகள்