மதுரை பெரியார் பஸ் நிலையம்: காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி

 

பெரியார் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது மாநகர அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை கருத்தில்கொண்டு பெரியார் பஸ் நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது என்று மாநகர காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர். 

இதன்படி திடீர் நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுரேஷ் தலைமையில் மேலும் 10 போலீசார், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பள்ளி தொடங்கும் நேரம், பள்ளிக்கூடம் முடிவடையும் நேரம் மற்றும் பரபரப்பான நேரங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுதவிர 2 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் மேலும் நடக்காத வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது,

கருத்துரையிடுக

0 கருத்துகள்