இன்றைய சூழ்நிலையில் பெண்கள் தனியாக வெளியில் சென்று வரும் பொழுது பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது இதிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு காவல்துறை பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது இதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் யாதவர் கல்லூரி மாணவிகள் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இந்த பதாகையில் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட செயலி தான் இந்த (SOS)செயலி, அவசர காலங்களில் இந்த ,(SOS) செயலில் உள்ள சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டும், உடனே 15 வினாடிகளில் தலைமை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றடையும் அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் தாங்கள் இருக்கும் ஆபத்தான இடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிந்து அதன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் உறவினருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும் அந்த இடத்தை சரியாக அறிந்து கொள்ள தங்கள் கைபேசியை எப்போதும் on-ல் வைத்துக்கொள்ள வேண்டும் கைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கக்கூடாது.
காவலன் (SOS) மூலம் பெண்களுக்கான அவசரத் தேவைகள் ஈவ்டீசிங், கடத்தல், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றின் போது உடனடியாக உதவிகளைப் பெற முடியும் பெண்களை கொடுமை செய்தால் என் 181-ஐ அழைக்க வேண்டும், பெண் குழந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எண் 1098-ஐ அழைக்கவேண்டும்.
உங்கள் பள்ளி குழந்தைகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையில் அவசர உதவி எண் 14417-ஐ அழைக்க வேண்டும் வயதான பெண்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் என் 14567-ஐ அழைக்கவும் என எழுதப்பட்ட வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


0 கருத்துகள்