நியூபெர்க் டயக்னாக்ஸ்டிக்ஸ் மற்றும் மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட்டரி இணைந்து புதிய நிறுவனமாகசெயல்பட ஒப்பந்தம்

 நியுபெர்க் போஸ் லேபரட்டரி பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் செயல்படும் 4 முன்னணி சங்கிலித்தொடர் ஆய்வகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம் 150 ஆய்வுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்களுடன் செயல்படுகிறது. இந்தியா மட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுகிறது. இந்நிறுவனம் மதுரையில் உள்ள பிரபலமான போஸ் கிளினிக்கல் லேபரட்டரி நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.


இதற்கான கூட்டு ஒப்பந்தம் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் டாக்டர். ஜிஎஸ்கே வேலூர், நிறுவனர் மற்றும் தலைவர் நியூபெர்க் மற்றும் டாக்டர்.புரட்சிமணி, டாக்டர்.பி. அறிவரசன், போஸ் கிளினிக்கல் லேபரட்டரி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.  ஏ.கணேசன், துணைத்தலைவர், டாக்டர்.சரண்யா நாராயண், தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் மைக்ரோபயாலஜிஸ்ட், நியுபெர்க் குழுமம் தலைமை செயல் அதிகாரி ஐஸ்வர்யா வாசுதேவன்  லேபரட்டரி ஆகியோர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


போஸ் கிளினிக்கல் லேபரட்டரி டாக்டர்.எஸ்.புரட்சிமணி கூறுகையில், 1976ஆம் ஆண்டு முதல் மதுரை மக்களுக்கு செயலாற்றி வருகிறோம் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நியூபெர்க் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் அந்நிறுவனத்தின் நிபுணத்துவம் புதிய அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் மேலும் சிறப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதி மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய செயலாற்ற உள்ளோம் என்று கூறினார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்