மதுரை மாநகராட்சி ஊழியர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்


 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர், கார்ப்பரேட் மாடல் நிர்வாகத்தை செயல்படுத்தி வரும் ஆணையரை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 625 ரூபாய் ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனோ காலத்தில முன்களப் பணியில் ஈடுபட்ட துப்புறவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது திராவிட  மாடல் ஆட்சி  என்றால் ஆணையர் கார்த்திக்கேயனை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்து பேசினார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்