கடலூர் மாவட்டம் தனியார் வங்கி: இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல - வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு



    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இயங்கும் தனியார் வங்கியான ICICI வங்கி மக்கள் மீது அக்கறை இல்லாமலும் ஊழியர்கள் சரியான முறையில் வாடிக்கையாளர்களை மதிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் நீங்கள் அந்த அக்கவுண்ட்டில் பணம் போடுங்கள் , இந்த அக்கவுண்ட்டில் பணம் போடுங்கள் என்று போன் மேல் போன் போட்டு தொல்லை கொடுக்க தெரிந்த பரங்கிப்பேட்டை ICICI வங்கிக்கு  இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் நோன்பு பெருநாளின்போது 10, 20, 50, 100 என அதிகளவில் சில்லறை கேட்பார்கள் , அதை தனது மேலிடத்தில் கேட்டு வாங்கிவைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை 

கவுண்ட்டரில் கேட்டால் சில்லறை இல்லை என்கின்றார்கள் , VIP என சிலரை வைத்துக்கொண்டு அவர்களுக்கு கவரில் போட்டு சில்லறை கொடுக்கின்றார்கள் இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல வாடிக்கையாளர்களை மதிக்கவிட்டால் பரங்கிப்பேட்டை மக்களுக்கு ICICI வங்கி மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் அது பரங்கிப்பேட்டை ICICI வங்கிக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும் 

வருங்காலங்களில் தவறுகளை சரி செய்துகொண்டு பரங்கிப்பேட்டை ICICI வங்கியை குறையில்லாமல் கொண்டு செல்லுங்கள் என வாடிக்கையாளர்களும், பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்