ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கோரி மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 

மத்திய அரசின் இலவச வீடு திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டம் அனைத்து மாநிலங்களிலும்  செயல்பட்டு வருகிறது அதேபோல் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இத்திட்டம் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது.

 இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.பெருமாள், இளைஞர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ், அமைப்புசாரா பிரிவின் மாவட்ட தலைவர் அருண், திருப்பாலை மண்டலத் தலைவர் முத்துராஜ், சண்முகநாதன், ஜெகன், கார்த்தி, சூர்யா, மகேந்திரன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கையை மனுவாக அளிக்க வந்திருந்தனர். 

  அம்மனுவில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இன்றுவரை பணி ஆணை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், குடிசை மாற்று வாரியத்தில் தற்காலிக பணியாளர்கள் மூலம் மக்களையும் தொடர்பு கொண்டு திட்டத்தை செயல்படுத்துவதால் முறையான முறையில் சென்றடைய வில்லை இதில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது எனவும், இதுதொடர்பாக 5 முறைக்கு மேல் மனுக்கள் சமர்ப்பித்துள்ளோம் மேலும் பணி ஆணை கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு 1 அல்லது   4 தவணைகளாக மானியம் வங்கிக் கணக்கில் இன்று வரை ஏற்றப்பட வில்லை இதுதொடர்பாக அலுவலகத்திற்குச் சென்று கேட்டால் சரியான பதில் தராமல் மக்களை அலைக்கழிக்கின்றனர்.

  தற்காலிக பணியாளர்கள் மூலம் பணி ஆணை என்ற பெயரில் சில எண்களை பயனாளிகளிடம் எழுதி கொடுத்து இதுதான் பணியாணை என கூறப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இடைத்தரகர்கள் அங்கு பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுடன் இணைந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு திட்டத்தை வழங்கி அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது வீடு கட்டுவதற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனியாக மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் எனக்கூறி மின்சார வாரியத்தில் தெரிவித்து மின்னிணைப்பு தர மறுக்கின்றனர். 

ஆகவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக இத்திட்டத்தை அரசு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டுமெனவும் முறைகேடுகள் செய்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அனைத்து வீடு இல்லாத ஏழைகளுக்கு ஆவாஸ் யோஜனா திட்டம் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யவேண்டுமென மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்