போலியான ஆதார் ஆவணங்களைக் கொண்டு மோசடி செய்து சொத்து அபகரிப்பு


 தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஆண்டிப்பட்டி தாலுகாவில் இருந்து மொ.ராசு என்பவர்  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்திருந்தார் அம்மனுவில், இவர் களுடைய தாயாரான ஜோதியம்மாள் பூர்வீக சொத்தை  மகன்கள் மொ.ராசு, பொன்னையா, பால்சாமி பெயரில் பேரையூர் சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு கிரையம் செய்துள்ளார். அதன் பின்பு ஜோதியம்மாள் இறந்துவிட்ட நிலையில் சொத்தினை உட்பிரிவு செய்து தனித்தனியாக மூவரும் கணினி பட்டா எடுத்துக்கொண்டனர். 

இந்நிலையில் எங்களுடைய நிலத்திற்கு கணினி சிட்டா எடுத்து பார்த்தபோது எங்கள் பெயரிலுள்ள நிலத்தை பேரையூர் வட்டம் கரிசல்பட்டி சேர்ந்த சோனை அவருடைய மனைவி  பஞ்சவர்ணம் மற்றும் அவருடைய மகன் பாண்டி ஆகிய இருவரும் மொ.ராசு என்னுடைய பெயர் கொண்ட ஆதார் நம்பர் போல போலியான நபரின் ஆதார் அட்டை கொண்டவரை வைத்தும் அதேபோல் என் அண்ணன்கள் பெயருள்ள போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி எங்களுடைய நிலத்தினை பஞ்சவர்ணம் மற்றும் அவருடைய மகன் பாண்டி ஆகிய இருவரும் பேரையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியான அடையாள அட்டை மற்றும் போலி ஆவணத்தை தயாரித்து  மோசடி செய்து  எங்களுடைய நிலத்தினை அபகரித்து கொண்டனர். எனவே போலியாக உள்ள ஆவணத்தை ரத்து செய்து உண்மையான எங்கள் ஆவணத்தை சரி செய்து எங்களுடைய நிலத்தினை மீட்டுத்தரும் படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

கருத்துரையிடுக

0 கருத்துகள்