நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பெண்கள் ஒப்பாரிவைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



     மத்திய அரசின் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை, சுங்க சாவடி கட்டணம் விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசின் சொத்து உயர்வை கண்டித்தும்  குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற   பல்வேறு வாக்குறுதி அளித்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நாம் தமிழர் கட்சி மதுரை மாநகர் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் கேன் உட்பட வைத்து மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் வி.சிவானந்தம், மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பொறியாளர் செ.அருண் ஜெயசீலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றிக்குமரன் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி அனைத்து நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்