சொத்துவரி விதிப்பில் விதிவிலக்கு அளிக்ககோரி மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர். சரவணன் வலியுறுத்தல்

 

சொத்துவரி விதிப்பில் விதிவிலக்கு அளிக்ககோரி மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர். சரவணன் வலியுறுத்தல்




   மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்று அளித்தார் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில காரணங்களை குறிப்பிட்டு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி விகிதங்களை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த வரிஉயர்வு சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும், கண்டனங்களும் வந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை வரி உயர்வை கண்டித்து சொத்து வரியா? அல்லது சொத்தே வரியா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் மதுரைக்கு மற்ற மாநகராட் சிகளை விட பல மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. விரிவாக்க பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட பிறகு வரி உயர்வு செய்யப்படும் என்ற அறிவிப்பை தாண்டி ஏற்கனவே உள்ள 72 வார்டுகளுடன் சேர்க்கப்பட்ட 28 வார்டுகளில் ஏ,பி, சி, பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு டி பிரிவில் வைக்கப்படும் என்று முடிவில் அறிவிக் கப்பட்டது. தமிழக அரசின் பொதுவான அறிவிப்பினை தொடர்ந்து மதுரையிலும் சொத்துவரியை மேலும் உயர்த்தினால் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படும். எனவே மதுரை மக்களை வாட்டி வதைக்கும் வண்ணம் செயல்படாமல் மாமன்ற கூட்டத்தில் மதுரைக்கு வரி உயர்வு விதிக்காமல் விதி விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று சொத்து வரி உயர்த்தாமல் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பழைய வரை முறைகளை நெறிப்படுத்தி வரி கட்டாதவர்கள் இடம் வரிவசூல் செய்தாலே மாநகராட்சி நிதி நிலைமை சீராகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மலர் செய்தியாளர் மு.கணேஷ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்