உசிலம்பட்டியில் 800 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 800 கிலோ போதைப் பொருளான பான்பராக் குட்கா உள்ளிட்ட பொருட்களை உசிலம்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.பி நல்லு ஆகியோர் கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 

இன்று அதிகாலை 8.00 மணி அளவில் தென் மண்டல காவல்துறைத்தலைவர் உத்தரவின்பேரில் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் (பொறுப்பு), உசிலம்பட்டி நகர காவல்நிலைய ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவலர்கள் தனிப்படையுடன் மதுரை தேனி சாலையில் முத்துப்பாண்டிபட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கொங்கபட்டியை சேர்ந்த ஜெயவீரன் மகன் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ராமச்சந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் மகன் மூர்த்தி, தருமபுரி மாவட்டம் பிடமனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சின்னபட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்ராஜ் மகன் அம்பரீஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேஷ் மகன் திரிசங்கு என்ற சங்கர் ஆகியோர் வந்த இரண்டு வானங்களை பிடித்து சோதனை செய்ததில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா 67 மூட்டைகளில் சுமார் 750 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலையை  கைப்பற்றி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் புகையிலையை கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனம் ஒரு டூவீலரை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மதுரை மலர் உசிலம்பட்டி செய்தியாளர் சூரியபாண்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்