ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மதித்திடு!, கியான்வாபி மஸ்ஜிதிற்கு எதிரான இந்துத்துவா சதிகளை முறியடிப்போம் என முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்ட தலைவர் எம். அகமது ஃபைசல் மக்தூமி தலைமை தாங்கினார், தமிழ் மாநில பொதுச்செயலாளர் கே.அர்ஷத் அஹமது அல்தாஃபி கண்டன உரையாற்றினார். மதுரை மாவட்ட பொருளாளர் எம் தஸ்னிம்நாபிஃஈ நன்றி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பழமைவாய்ந்த கியான் வாபிமஸ்ஜித் வாரணாசி நீதிமன்றத்தின் அணுகுமுறையும் அவசர உத்தரவு நாட்டின் இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மையை அவமதிக்கும் செயலாக உள்ளது. வாரணாசி நீதிமன்றம் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறி கியான்வாபி மஸ்ஜிதிற்குட்பட்ட பகுதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது கியான்வாபி மஸ்ஜிதிற்கு நீதி கேட்டு நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது எனவும் மதசார்பற்ற இந்திய திருநாட்டில் மதங்களின் வழிபாட்டு முறைகளையும் கலாச் சாரங்களையும் பின்பற்றுவதோடு ஓரணியில் நின்று இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பாசிச சக்திகளை அடையாளம் கண்டு பிடிப்போம் என கோஷங்கள் எழுப்பினர்.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மேலூர்சக்தி ஹரிகரன், எஸ்டிபிஐ மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஏ. பிலால்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட செயலாளர் எஸ். சையது இஸ்ஹாக், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டத் தலைவர் ஏ.ஆசித், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.முகமது அப்துல் ஹக் ஸ ஆதி, ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்