மதுரையில் ஊர் பெயருக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா



 

 எம்மால் இயன்றது சார்பாக ஊர் பெயருக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா மதுரை ஆத்திகுளம் பகுதி ராஜா பதினெட்டாம் படியான் இல்லத்தில் நடை பெற்றது. எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன்  தலைமை வகித்தார்.  திருவள்ளுவர் நூலகம் கண்ணன் முன்னிலை வகித்தார். சந்தான கிருஷ்ணன், சங்கரலிங்கம், வர வேற்றார். அரசுமணி தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந்தி னராக துணைவனப் பாதுகாவலர் ஓய்வு பெற்ற (DFO) நாகையா, ஜெய்னி சிறப்புப் பள்ளி சேர்மன் கணேசன், பதிவுத்துறை தலைமை உதவியாளர் கனகராஜ், பாப் சிங்கர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகையா ஆத்திகுளம் பெயர் போன ஆத்திமரங்கள் பற்றி பயனையும், மரம் நடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததுல் குறித்து சிறப்புரை ஆற்றினார். ஊர் பெயர் பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ராஜா பதினெட்டாம் படியான், லட்சுமி, பிரித்தி விராஜ், ஸ்ரீ ஆரா மமுதன் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்