கடலூர்: தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தயா.பேரின்பம், ஆதிதமிழர் முன்னேற்றக் கழக கடலூர்மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும். தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்களை போர்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்டு தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும். தமிழ்நாட்டில் புரட்சியாளர் சட்ட மாமேதை அம்பேத்காரின் திருவுருவ சிலைகளுக்கு வைக்கப் பட்டுள்ள கூண்டு களை அகற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி பொருளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், ஆதித் தமிழர் முன்னேற்றக் கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி கிராம தெருக்கூத்து கலை இலக்கிய பேரவை திட்டக்குடி தொகுதிச் செயலாளர் ராயர், மகளிரணி அனிதா மற்றும் கிளை நிர்வாகிகள் சாமிதுரை, சின்னஏட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மலர், கடலூர் மாவட்டம் செய்தியாளர் சூரியமூர்த்தி
0 கருத்துகள்