மதுரை: பொதுமக்களின் குடியிருப்பை காலி செய்து தருமாறு 10-வது வார்டு கவுன்சிலர் மிரட்டல்

மதுரை, மூன்று மாவடி, சம்பகுளம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியை காலி செய்து தருமாறு சுயச்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அம்மனுவில்,

மதுரை மாவட்டம், மூன்று மாவடி, சம்பகுளத்தில் 60 ஆண்டு காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள இடத்தை நத்தம் புறம்போக்காக (மக்கள் குடியிருக்கும் பகுதி) மாற்றி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

இதில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது, அந்த இடத்தை விலைக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு மாறி சென்று விட்டனர். மீதமுள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், 10-வது வார்டு சுயேச்சை கவுன்சிலரான முத்துக்குமாரி, கணவர் ஆழ்வார் ஆகிய இருவரும், "எனக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை, வேறு ஒரு கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று கூறுவது மட்டுமில்லாமல், நாங்கள் குடியிருக்கும் பகுதியை வேறு ஒருவருக்கு விற்பதற்காக, இந்த இடம் பட்டா இடம் கிடையாது எனவும், பல இடங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு நாங்கள் குடியிருப்பு பகுதியை காலி செய்து தருமாறு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை கொடுப் பதாகவும், மிரட்டுவதாகவும் மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 இது சம்பந்தமாக ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் வடக்கு தாலுக்கா வட்டாச் சியரிடம், அப்பகுதியில் நடக்கும் பிரச்சினைகளை முழுவதுமாக எடுத்துக்கூறி கே.மாரி, செல்வம், டி.காசி, ராஜேந்திரன், கே.செல்லத்துரை, பரமேஸ்வரன், ஆர்.ஹரிதாஸ், குருசாமி, திருப்பதி, முருகேசன், குமரய்யா ஆகியோர் கோரிக்கையை மனுவாக அளித்தனர். 




கருத்துரையிடுக

0 கருத்துகள்