உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா


 உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உசிலம்பட்டி தாலுகா ஏருமார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுமுத்துவுக்கு பணி நிறைவு ஓய்வு பெற்றதால் பாராட்டு விழாநடைபெற்றது.  பாராட்டு விழாவில், உசிலம்பட்டி சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள், சங்க மாநில தலைவர்  ராஜன் சேதுபதி, மதுரை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர், மதுரை மாவட்டதுணைதலைவர் முத்துக் கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். இவ்விழாவில்  துணை வட்டாட்சியர்கள், உசிலம்பட்டி வட்டகிளை தலைவர் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் அலுவலகப் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மலர் உசிலம்பட்டி செய்தியாளர் சூரிய பாண்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்