சிதம்பரத்தில் இந்து முன்னணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

 சிதம்பரம் நடராஜரையும், தில்லைகாளியம்மனையும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்திப் பேசிய கயவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க கோரியும் இனிவரும் காலங்களில் இந்து மதத்தையும் கடவுள்களையும் இழிவுபடுத்துவது யாராக இருந்தாலும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசையும் கண்டித்து சிதம்பரம் கீழரத வீதியில் இந்து முன்னணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மணலி மனோகர், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அ.வா. சனில் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கார்த்தி நன்றி உரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்