சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பொன்னந்திட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி மிக ஆபத்தான நிலையில் உள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் பேருந்து வரும் வரை வெயிலிலே பொது மக்கள் குழந்தைகள், சிறுவர்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் இந்த பேருந்து நிழல் குடையை உடனே சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்