மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் த.அனிதா தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருமங்கலம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியினர் M.மகாலிங்கம் (செயலாளர்), R.வாசுதேவன் (துணைச்சேர்மன்), A.S.முருகேசன், S.சீனிவாசகன், N.வினோத், M.ரகுபதி, B.கார்த்திக், G.குருசாமி, புரவலர்கள், N.பார்த்தசாரதி, B.ராஜேந்திரபோஸ், ஈஸ்வரன் ஜி.வேலுசாமி (அமுதா பழனிகுமார்) அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


0 கருத்துகள்