04.04.2022 அன்றைய மக்கள் குறை தீர்க்கும் நாளில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயரும் முன்னாள் ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி பாப்புசாமி மீது கொடுக்கப்பட்ட சாதிய ஊக்குவிப்பு பாலியல் வன்கொடுமை ஆகியவை மீது கொடுக்கப்பட்ட புகாரை இதுவரை எந்தவித விசாரணை நடத்தாமல் தாமதப்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் கிறிஸ்துவ எந்த ஆதாரமும் இல்லாத இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருச்சபை (R.C, CSI, TELC, Luthran) மற்றும் Pendicast அமைப்புகளில் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் கிறிஸ்தவ சபைகளில் ஜாதியை ஊக்குவிக்கும் திருமண தகவல் மையங்கள் பணிகளை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர் களுக்கு முன்னுரிமை அளித்து 50% கட்டணம் வசூலிக்க சிறுபான்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் தலைவர் எஸ்.செபாஸ்டின் சூசைராஜ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார் தமிழக மக்கள் நல கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சிறுபான்மை மக்கள் நல கட்சி ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை உரையாற்றினார்கள், குளோரி முன்னிலை வகித்தார் கவிதா கோரிக்கை உரையை வாசித்தார், சேசு நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்