செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.


 உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பாக விலைவாசி மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பாக மாநில தலைவர் மு.இராஜபாண்டியன் தலைமையில், மாநில இணைச்செயலாளர் கள்ளபட்டி இரா.சௌந்தரபாண்டியன், முன்னாள் தலைவர்கள் போடி குருநாதன், ஆண்டிபட்டி ஒச்சப்பன் க.விலக்கு முருகன் மற்றும் மகளிர் அணி அமைப்பாளர் மொக்கத்தாய்  மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் சொத்து வரி, தொழில் வரி, உயர்வை கண்டித்தும், சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், டிஎன்டி அரசு சலுகைகள் சாதிவாரி கணக்கெடுப்பின் அறிவிக்கக் கோரியும், பிரமலை கள்ளர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், உசிலம்பட்டி பகுதியில் தொழில்வளர்ச்சி மேம்படுத்தவேண்டும்.  

அரசு கள்ளர் சீரமைப்புத் துறையில் கல்வித் துறையை மாற்றி வருவாய்த்துறை மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமனம் செய்ய வேண்டும், தற்போதுள்ள அரசு கள்ளர் சீரமைப்புத் துறை இயங்கி வரும் இணை இயக்குனரை மாற்றக் கோரியும், மேலும் உசிலம்பட்டி மின் கோட்டத்தில் பணம் வாங்காமல் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்