மதுரை மாவட்ட அப்பள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அப்பள தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: போதிய வருமானம் இன்றி தவிக்கும் அப்பள தொழிலாளர்கள் என்ன செய்வது? யாரிடம் கேட்பது? மழையில் நனைகிறோம். வெயிலில் காய்கிறோம், ஆனாலும் எங்கள் நிலைமை மாறவில்லை. நாட்டின் பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர் களுக்கு ஏதாவது ஒருவகையில் கூலி உயர்வு கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? அப்பள தயாரிப்பின் மூலப் பொருட்களான உளுந்து, சோடா, எண்ணொய் மற்றும் வீட்டுவாடகை, மின்சாரக் கட்டணம், கல்விக்கட்டணம் மற்றும் உணவுகளுக்கான அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் ஏன்? மறுக்கிறார்கள்?.
மதுரையை சுற்றியுள்ள அப்பள கம்பெனிகளில் உற்பத்தி செய்யப்படும் அப்பளங்கள், இன்று பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரவுண்டு அப்பளம், பாய் உலகில் அப்பளம், மிளகு அப்பளம், பூ அப்பளம், சீரக அப்பளம், சோவி அப்பளம், பூண்டு அப்பளம், இன்னும் பல வகையான அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் இந்த நிலைமை? தொழிலாளர்களின் வாழ்வாதரம் இன்னும் உயரவில்லையே? அப்பள தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு, அப்பள வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், ஞாயமான கூலி உயர்வு வழங்கிட வேண்டும். அதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கிட வேண்டும்.
கடந்த 7வருடங்களுக்கு மேலாகா கூலி உயர்வு வழங்கப்படவில்லை. மதுரையை சுற்றியுள்ள 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்று பல இடங்களில் பபடி மிசின், தண்டு மிசின், இன்னும் பல அப்பள் தயாரிப்புக்கான மிசின். வகையான மிசின்கள் அப்பள தொழிலுக்குள் வந்தாச்சு. இதனால் கைகளின் மூலம் தயாரிக்கும் அப்பளத்திற்கும் கூலி உயர்வு கிடைக்கவில்லை. மிசின் மூலம் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு அதிக நேரம் வேலையும், அதற்கு குறைவான கூலியும் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு போதுமான கூலி உயர்வும் இல்லை, சத்தான உணவும் இல்லை. சுகாதரமான வாழ்கையும் இல்லை. இப்படியே போனால் அப்பள தொழிலையும், தொழிலாளர்களையும் யார் பாதுகாப்பது?.
நவீன இந்தியாவில் அதிநவீன மிசின்கள் வரலாம். புதுவகையான வியாபாரிகளும் உள்ளே வரலாம். ஆனால் அப்பள் தொழிலையே நம்பி வாழும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாத்திட வேண்டாமா? போதுமான கூலி உயர்வை வழங்கிட வேண்டாமா? மருத்துவ உதவி வேண்டாமா? அப்பள தொழிலாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அப்பள் வியாபாரிகளும், உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கு கால தாமதமின்றி உயர்வுக்கான பேச்சு வார்த்தையை தொடங்கிட வேண்டுகிறோம். ஆளும் அரசுகளே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காலங்களில் சரிவர வேலை இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் அப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கிடவும், தொழிலாளர் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்திடவும், வீடு இல்லாதோர் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிடவும், நலவாரிய அட்டையுள்ள அனைவருக்கும் கல்வி, விபத்து, திருமண உதவி, முதியோருக்கான பென்சன் உதவிகளையும் மற்றும் மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு சிஐடியு மதுரை மாவட்ட அப்பள தொழிலாளர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்