வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


 இந்திய அரசியல் சாசனம் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 போன்ற சட்டங்களுக்கு விரோதமாக கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் ஒருங்கிணைந்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார், கண்டன உரை, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மாபேகம், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரகுமான், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், பாப்புலர்ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத்தலைவர் அபுதாஹீர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச்செயலாளர் மாலின், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் ஷேக் ஒலி, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட செயலாளர் இஸ்ஹாக் இமாம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைவி ஆசியா மரியம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜாபர் சுல்தான் நன்றி உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்