மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மட்டும் ரூ.2,178 கோடி ரூபாய் கடன் நிலுவை இருப்பதும், அதனால் மதுரை கோட்டம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
மதுரை கோட்டம் என்பது மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தமாக 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 2 கோடி ரூபாயும், மாதத்திற்கு 65 முதல் 70 கோடி ரூபாய் வரையும் வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த மதுரை கோட்ட போக்குவரத்து கழகத்தின் நிதி நிலமை குறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பெறப்பட்ட பதில்கள் மூலம் ரூ.68 லட்சம் வாடகை பாக்கி இருப்பதும், தினமும் ரூ.78 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதும், ரூ.2,178 கோடி கடன் சுமை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
0 கருத்துகள்