இந்தியாவில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக இருப்பது தவறான கருத்துக்கள் மற்றும் உணர்வு ரீதியான தயக்கங்கள் காரணமாக உறுப்பு தானம் செய்பவர் களின் எண்ணிக்கை 10 லட்சம் நபருக்கு 1க்கும் குறைவாக இருப்பதால் உடல் உறுப்புகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது மீனாட்சி மிஷன் மருத்து வமனை ஆண்டுக்கு சுமார் 40 சிறுநீரகமாக அறுவை சிகிச்சைகளையும் 60 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும் ஒட்டுமொத்தமாக 2000-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை களையும் இது வரை செய்துள்ளது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குடலிறப்பை அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவர் நிர்வாகி டாக்டர் கண்ணன், சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர். சம்பத்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், இறப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். மோகன் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் ஆகியோர் பத்திரிக் கையாளர் சந்திப்பில் கூறுகையில் உறுப்பு தானம் என்பது உயிர்காக்கும் ஒரு நடவடிக்கையாகும் நம் நாட்டில் அதிக மக்கள் தொகை இருந்த போதிலும் உறுப்பு தான விகிதம் 10 லட்சம் பேருக்கு ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளது மூளைச்சாவு பற்றிய பொதுமக்களின் புரிதலின்மை கலாச்சார நம்பிக்கைகள் மதரீதியான தவறான கருத்துக்கள் மற்றும் உணவு ரீதியான தயக்கம் ஆகியவை இந்த நெருக்கடியான துயரமான தருணங்களில் உறுப்பு தானம் செய்வது குறித்து கரியத்துடன் முடிவு எடுப்பதற்கு தடையாக உள்ளன
உறுப்பு தானம் குறித்த கல்வியை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற செய்ய வேண்டும் மூளைச் சாவு ஏற்பட்டதன் கடும் துயரத்தில் இருக்கும் குடும்பங் களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை வழங்க வேண்டும் ஒரு ஆக்கபூர்வ மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே உறுப்புகளின் தேவைக்கும் அவைகள் கிடைப்பதற்கும் இடையிலான இடை வெளியை நம்மால் உண்மையில் குறைக்க முடியும்
நீண்ட காலமாக மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாக பெற்று செயல்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு நீண்ட காலமாக ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது உறுப்பு தான திட்டத்தை தமிழகம் தான் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப் படுத்தியது தற்போது இறந்தவர் களிடமிருந்து உறுப்பு தானம் பெற்று குரூப் மாற்று சிகிச்சை செய்வதில் நம் நாட்டிற்கு தமிழகம் வழிகாட்டுகிறது 2024 ஆம் ஆண்டில் மட்டும் இறந்த பிறகு உறுப்பு தானம் செய்த தானம் அளித்தவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 268 ஆக இருக்கிறது மத்திய அரசு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு மூலமாகவும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வந்தாலும் கிராமப்புறங்கள் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட நாட்களும் பரவலாக மேற் கொள்ளப்பட வேண்டும் உறுப்பு தானம் பற்றிய தவறான கருத்துகள் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக இருந்து வருகின்றன என கூறினர்
0 கருத்துகள்