கமுதியை சேர்ந்த பிகாம் இரண்டாம் ஆண்டு மாணவர் தெரிந்த நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கியதால் வளர்த்த காயம் அடைந்து முகம் மற்றும் கழுத்தில் பல இடங்களில் ஆழமான வெட்டு காயங்களால் முகம் சிதைந்த நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடலில் உள்ள தசைகள் எலும்பு மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவை வெளியே தெரிந்தன நோயாளியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது அதிகப் படியான இரத்த இழப்பு ஏற்பட்டதாலும் சுவாசிப்பதில் தடை ஏற்பட்டதாலும் அவருக்கு எந்த நேரத்திலும் ஹைபோவோலெமிக் ஷாக் ஏற்படும் நிலை காணப்பட்டது மேலும் அவரது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகள் செயல்பட போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாத ஆபத்தான நிலை காணப்பட்டது.
பல துறை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்புடன் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பல அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் மூலம் மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினார்கள் இந்த மருத்துவ குழுவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் மயக்க மருந்து ஆகிய துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்
இந்த சிகிச்சைகள் மற்றும் பலன்களைப் பற்றி மருத்துவ நிர்வாகி டாக்டர் பி.கண்ணன் கூறுகையில்; தாடை மற்றும் முகம் சம்பந்தப்பட்ட காயங்கள் ஒட்டு மொத்தமாக மாக்ஸில் லோஃபேஷியல் காயங்கள் என்று அழைக்கப்படும் சிக்கலான உடல் கூரியல் கட்டமைப்புகள் காரணமாக இது ஒரு தீவிர மருத்துவ பிரச்சனையாக இருந்தது இந்த சிறுவனைப் போலவே மாக்ஸில் லோஃபேஷியல் பகுதியில் ஏற்படும் அதிர்ச்சியும் சுவாசப் பாதைகளை பாதிக்கிறது இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எங்களின் பலதரப்பட்ட அணுகுமுறை சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தியதன் மூலம் நோயாளியின் உயிரை காப்பாற்றவும் முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை பாதுகாத்து மீட்டெடுக்கவும் அழகியல் சார்ந்த விளைவுகளை அடையவும் முடிந்தது
ஒருவர் ஒருவர் அறிமுகம் ஆவதில் முகம் என்பது மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இதனால் தாக்குதல் நிகழ்வுகளில் காயங்களுக்கு மாக்ஸில் லோஃபேஷியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாக்ஸில் லோஃபேஷியல் காயங்களுக்கு முக்கிய காரணங்கள் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் வன்முறை விளையாட்டு காயங்கள் மற்றும் தொழில்சார் ஆபத்துகள் ஆகும். மாக்ஸில்லோஃபேஷியல் காயம் உள்ள நோயாளிகள் மிகவும் சிதைந்த தோற்றத்துடன் உள்ளனர் இது பெரும்பாலும் உளவியல் உடல் மற்றும் ஒப்பனை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது ஆனால் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிபுணர் குழுவினர் காய மேலாண்மை மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் அதிநவீன நுட்பங்களை பயன்படுத்தி காயங்களை முற்றிலும் குணப் படுத்தி சாதனை படைத் துள்ளது என தெரிவித்தார்
0 கருத்துகள்