கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா 21/03/2023 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கடலூர் பீவல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் மஞ்சுளா கொரோனா காலகட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பல்வேறு மருத்துவ உதவிகளை செய்துள்ளார் அது மட்டுமின்றி அக்காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒருவித அச்சத்தில் இருந்தனர் அவர்களிடம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளையும் அனைத்து மக்களிடமும் ஏற்படுத்தினார்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவுற்றர்களுக்கும் தொடர்ந்து தம்மால் இயன்ற இலவசமாக மருத்துவ உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார் இவருடைய மருத்துவ சேவையை பாராட்டு விதமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் செவிலியர் மஞ்சுளாவிற்கு பாராட்டுகளையும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பித்தனர்.
0 கருத்துகள்