மதுரையைச் சேர்ந்த இளைஞரின் உணவுப்பாதையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம் -அப்போலோ மருத்துவமனை சாதனை

 

 மதுரையைச் சேர்ந்த 28 வயது இளைஞரின் உணவுப்பாதையில் இருந்த புற்றுநோய் கட்டியை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, மதுரை அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் நிபுணர்கள் சாதனை படைத்தனர்.

 இதுகுறித்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா கூறியதாவது: அந்த இளைஞர் உணவு விழுங்க முடியாமல் சிரமப்பட்டதால் பரிசோதனை செய்த போது உணவு குழாயில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறிய இதற்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்தால் அதிக வலி, நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே வலியின்றி மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி செய்ய ஆரம்பித்தார் ஒருவாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார் என்றார். 

  புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் டாக்டர். சதீஷ் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “உணவுக் குழாய் புற்றுநோய்க்கு பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபிமட்டுமே உபயோகப் படுத்தப்படும். ஆனால் இந்த வாலிபர் பூரண குணமடைய மும்முனை சிகிச்சை (TRIMODALITY THERAPY) அளிப்பது மிகவும் அவசியம் என்று எங்கள் மருத்துவர் குழு ஆலோசனைக்கு பின் முடிவு செய்தது. அதன் காரணமாக இவருக்கு நான்கு வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் நுண் துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இவரது புற்று நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான மும்முனை சிகிச்சை வெற்றிகரமாக வழங்கப் பட்டுள்ளது.

 சமீபத்திய கதிர்வீச்சுசிகிச்சை முறைகள் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பது பாதுகாப்பானது மேலும் மிகவும் எளிதாகி விட்டது” என்று கூறினார். இது குறித்து மருத்துவத்துறை ஜேடிஎம்எஸ் டாக்டர் பிரவீன்ராஜன் கூறுகையில், “உணவுக்குழாய் புற்று நோய் என்பது பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படுவதில்லை. இதனால் இதற்கான சிகிச்சை பல சமயங்களில் முழுமையாக செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவது சகஜம். இருப்பினும் நமது மருத்துவர் குழுவின் சிறப்பான சிகிச்சையால் இவர் தற்போது குணமடைந்துள்ளார். மேலும் இரண்டு வருடங்கள் வரை இவரது புற்றுநோய் குறித்து கண்காணிப்பு பரிசோதனைகள் அவ்வப்போது மேற் கொள்ளப்படும்” என்று கூறினார். 

 மருத்துவத்துறை டாக்டர் பிரவீண்ராஜன், புற்றுநோய் மருந்தியல் துறை நிபுணர் டாக்டர் தேவானந்த் சிகிச்சையில் பங்கேற்றனர். மதுரை மண்டல சி.ஓ.ஓ., நீலகண்ணன், மருத்துவக் குழு நிபுணர்கள் பிரேம் டேனியல், ராஜேஷ்பிரபு, அய்யப்பன், கணேஷ், ப்ரவீண்குமார், பிரபு, மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், செயல்பாட்டு பொது மேலாளர் டாக்டர் நிக்கில் திவாரி  உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்