துரத்தும் தெரு நாய்கள், ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள்: நடவடிக்கை எடுக்காத மதுரை மாநகராட்சியால் நாய்கள் படுகுஷி

 மனிதர்களின் உற்ற தோழனாக வளர்ப்புப் பிராணியான நாய்கள் விளங்கி வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கு வீட்டில் சரியாக தடுப்பூசி போட்டு பராமரிக் கப்பட்டு வருவதால் அவைகளால் பெரும் பாலும் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

மதுரை மாநகர் முழுவதும் உள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல் லையால் பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். தெருக்கள், சாலைகளில் என எங்கு பார்த்தாலும் மனிதர்களைப் போல் சகஜமாக திரியும் நாய்கள் திடீரென வெறி பிடித்து குழந்தைகள் முதல் முதியவர் வரை விரட்டி விரட்டி கடிக்கிறது. 

தெருவில் விளையாடும் குழந்தைகள் அடிக்கடி நாய்க்கடியால் பாதிக்கப் படுகின்றனர். நாய் கடியால் பாதிக்கப் பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக நாள் தோறும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல் கின்றனர். இதை வைத்தே மாவட்டத்தில் நாய்களின் தொல்லையை கணிக்கமுடியும். 

மதுரையில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இரவு சிப்ட் பணி நடக்கிறது. அப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் நள்ளிரவு வீடு திரும்பு கின்றனர். அவர்கள் பைக்கில் சாலையில் செல்லவே முடியவில்லை. தெரு நாய்கள் குரைத்தப்படி துரத்துகின்றன. ஒரு நாய் குரைக்கவோ, துரத்தவோ ஆரம்பித்தால் பின்தொடர்ந்து ஏராளமான தெருநாய்கள் குவியத் தொடங்கி வாகனங்களில் செல்வோரை துரத்த ஆரம்பிக்கின்ற இதனால் வாகனங்களில் செல்வோர் நிலை குலைந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் பரிதாபங்கள் நள்ளிரவில் நடக்கின்றன. நாய் கடித்தோ, அது துரத்தியோ கீழே விழும் சம்பவங்கள், பெரியளவுக்கு வெளியே வராததால் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி முன்போல் நடவடிக்கை எடுக்கவில்லை. 

தெருநாய்கள் சிறுமிகள் தெருவில் நடந்து செல்லும் போது திடீரென்று துரத்துகின்றன. இதனால் அலறியடித்துக் கொண்டு ஓடும் போது அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் மாணவ மாணவிகளை துரத்தி துரத்தி கடிக் கின்றன. இரவில் தெருநாய்கள் கூட்டாமாக சேர்ந்து கொண்டு அவை களுக்குள் கடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் சத்தமிடுகின்றன. இரவில் தெரு நாய்களின் சத்தத்தினால் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 

தெருக்களில் மக்களை நாய்கள் துரத்துவதாலும் பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாலும் தான் நாய்களை பிடித்துச் செல்ல மாநக ராட்சியிடம் மக்கள் கெஞ்சுகின்றனர். மதுரை மாவட்ட பகுதிகளான  ஒத்தக்கடை சுதந்திரநகர், காந்திநகர், ஐயப்பன்நகர், பாரதிநகர், பாண்டியன் நகர், இராஜகம்பீரம், நரசிங்கம், புது, பழைய விளாங்குடி, செல்லூர், ஜெய்ஹிந்த்புரம், கல்மேடு, திருமங்கலம் இன்னும் பல  அதிகமாக தெருநாய்கள் காணப்படுகின்றன. 

முன்பெல்லாம் நாய்களுக் கென்று நிறைய இடங்கள் இருந்தன. பெரும் பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ தொலை வாகவோதான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப் பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். குப்பைகளில் தெருக்களில் கிடைக்கும் உணவு களையே உண்ணும். ஆனால், நகர்ப் புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியி ருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன. 

2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மதுரையில் மட்டுமே 47 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. தமிழக அளவில் 2 கோடிக்கும் மேலான தெருநாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மதுரையில் தெருநாய்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்க வாய்ப் புள்ளது 

விலங்குகள் நலவாரியம் நாய்களை கொல்லக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. அதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது இதை எப்படியோ தெரிந்து கொண்ட நாய்கள் படும் குஷியில் உள்ளது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்