மதுரை திருமங்கலம் அகத்தியர் அன்னதான அறக்கட்ளை சார்பில் சுதந்திர அமுதப் விழாவில் மரக்கன்றுகள் நடும்விழா


இந்திய திருநாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழா திருமங்கலம் வட்டம், கரிசல்பட்டியில் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை சார்பில் இராயல் சீமா நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் பா.முத்துப்பாண்டி தலைமையில் 100 மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. இராயல் சீமா நிறுவனத்தின் மேலாளர்கள் கே.பரசுராமன், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகத்தியர் அன்னதான அறக்கட்டளையின் செயலாளர் எம்.சகுந்தலாதேவி வரவேற்புரையாற்றினார். துணைச்செயலாளர் கா.அமுதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி மற்றம் பொதிகை சிலம்பம் ஆசான் கே.பாக்கியராஜ் சிறப்புரை ஆற்றினார். சமூக ஆர்வலர்கள் ச.சுகுமார், ஜெ.விஜயலிங்கம்,  சிலம்பம் பயிற்சியாளர் கோபிநாத், ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினார்கள். மாலா, கவிதா, பாண்டிசெல்வி, பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முடிவில் பாெருளாளர் பா.செல்லப்பாண்டி நன்றி கூறினாா்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்