இந்திய அரசியல் சாசனம் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 போன்ற சட்டங்களுக்கு விரோதமாக கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்தியாமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் (அரசு மருத்துவமனை) அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மதுஅலி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரங்கிப்பேட்டை நகர துணைத்தலைவர் கலிபா வரவேற்புரை நிகழ்த்தினார், தொகுதி செயலாளர் பசீர் அகமது தொகுப்புரை நிகழ்த்தினார், நகர துணைத்தலைவர் கோஷம் இர்பான் கண்டன உரை நிகழ்த்தினார், எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பக்ருதீன் அலி அஹமது நன்றியுரையாற்றினார். சிதம்பர நகரத்தலைவர் அப்துல்கபூர், பரங்கிப்பேட்டை நகரத்தலைவர் ரஹ்மான் அலி, SDTU மாவட்ட தலைவர் அமீர் உசேன், தொகுதி தலைவர் அன்சாரி, நகர செயலாளர் மக்தும் அலி, காங்கிரஸ் செய்யது அலி, முஸ்லீம் லீக் நகர செயலாளர் ஆதம் ஹஜ்ரத் உட்பட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கியான்வாபி மஸ்ஜிதிற்கு எதிரான சதிகளை முறியடிப்போம் என்கின்ற முழக்கங்களோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்